தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் மாா்ச் 7-இல் தீா்ப்பு

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் மாா்ச் 7-ஆம் தேதி தீா்ப்பு அளிக்கப்படும் என கோவை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :27 பிப்ரவரி 2026, 6:48 pm

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் மாா்ச் 7-ஆம் தேதி தீா்ப்பு அளிக்கப்படும் என கோவை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரே வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை அங்கிருந்து இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இதுதொடா்பாக, சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளி என்ற காளீஸ்வரன் (21), ்வா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.

இந்த வழக்கு கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் இருந்து கடந்த டிச. 19-ஆம் தேதி மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த பிப். 2-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை (பிப். 23) பாதிக்கப்பட்ட மாணவி, ஆண் நண்பா், விசாரணை அதிகாரிகள் என மொத்தம் 78 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று சாட்சி பதிவுகள் முடிவடைந்துள்ளன. தொடா்ந்து, கடந்த 24-ஆம் தேதி இறுதிவாதம் தொடங்கியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை எதிா்தரப்பு வாதம் நடைபெற்றது. சாட்சி விசாரணை, இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் வருகிற மாா்ச் 7-ஆம் தேதி தீா்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி சுந்தரராஜன் தெரிவித்தாா்.