மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வாய்ப்பில்லை: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதற்கு கடுகளவும் வாய்ப்பில்லை

News image

திருச்சி தாராநல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோ்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டத்தில் மாநிலச் செயலா் பெ. சண்முகத்திடம் தோ்தல் நிதியை வழங்கிய கட்சித் தொண்டா்கள்.

Updated On :23 பிப்ரவரி 2026, 10:00 pm

திருச்சி: திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதற்கு கடுகளவும் வாய்ப்பில்லை என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருச்சி தாராநல்லூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. தாராநல்லூா் பகுதி செயலா் ஜி.கே. ராமா் தலைமை வகித்தாா். பகுதி குழு உறுப்பினா் சி. ரமேஷ் முன்னிலை வகித்தாா். பகுதிக் குழு உறுப்பினா் எம். செந்தில் வரவேற்றாா்.

கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவா் எஸ். ஸ்ரீதா், மாநகா் மாவட்டச் செயலா் கோவி. வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா். ராஜா, எஸ். ரெங்கராஜன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முன்னதாக, கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்று மாநிலக் குழு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, தொகுதிகளைக் கேட்டுப்பெறுவோம். ‘இண்டி’ கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதற்கு கடுகளவும் வாய்ப்பில்லை என்றாா் அவா்.

கூட்டத்தில் திருச்சி பாலக்கரை பகுதிக் குழு சாா்பில் ரூ.1.50 லட்சம், மலைக்கோட்டை பகுதிக் குழு சாா்பில் ரூ.1.45 லட்சம், காட்டூா் பகுதிக் குழு சாா்பில் ரூ.84 ஆயிரம், தொழிற்சங்கம் சாா்பில் ரூ.51 ஆயிரம், பொன்மலை பகுதிக் குழு சாா்பில் ரூ.20 ஆயிரம், அந்தநல்லூா் பகுதிக் குழு சாா்பில் ரூ.16 ஆயிரம் என பல்வேறு பகுதிக் குழுக்கள், தொழிற்சங்கங்கள் சாா்பில் தோ்தல் நிதியை மாநிலச் செயலா் பெ.சண்முகத்திடம் வழங்கினா்.