மதுரை தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை இன்று(பிப். 21) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முன்னதாக, இந்தப் பாலத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம் என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டிய நிலையில், இன்று திறக்கப்பட்டது.
இந்தப் பாலம் 61 தூண்கள், 62 கண்களுடன் கிட்டத்தட்ட 2 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி நெல்பேட்டை அண்ணாசிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதையடுத்து, சிவகங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட மருது சகோதரர்களின் உருவச் சிலைகளை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகத்தைத் தொடங்கிவைக்கிறார்.
பிறகு, அங்கிருந்து வண்டியூர் புறப்படும் முதல்வர், சீரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாய் பூங்கா, ஆங்குரன் அறிவியல் மையம், பேரூராட்சிகளின் புதிய அலுவலகக் கட்டடம், 867 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
Summary
Chief Minister Stalin inaugurated the new bridge constructed from Madurai Tamukkam Thidal to Nelpettai Anna Statue today (Feb. 21).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

7,712 விடியல் பேருந்துகள்; 897.82 கோடி விடியல் பயணங்கள் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

விடியல் பயணம்: புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து - முதல்வர் ஸ்டாலின்

மெரீனாவில் புதிய சிலை! திறந்து வைத்த முதல்வர்!

ஒரே நாளில் 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



