மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

7,712 விடியல் பேருந்துகள்; 897.82 கோடி விடியல் பயணங்கள் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

விடியல் பயணம்: புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் குறித்து...

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்

Updated On :22 மார்ச் 2026, 6:28 pm

விடியல் பயணம்: புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

விடியல் பயணம் புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து எனவும், திராவிட மாடலில் 7,712 விடியல் பேருந்துகள் மூலம் மொத்தம் 897.82 கோடி விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், விடியல் பயணம் புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து. திராவிட மாடலில் 7,712 விடியல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மார்ச் 1 வரையில், 2021-22 - 95.86 கோடி, 2022-23 - 166.53 கோடி, 2023-24 - 186.35 கோடி, 2024-25 - 213.94 கோடி, 2025-26 - 235.14 கோடி என மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள விடியல் பயணங்கள் - 897.82 கோடி.

பாதுகாப்பான, சுதந்திரமான பயணங்களால் மகளிர் முன்னேற்றத்தில் புதிய உயரங்களை எட்டியிருப்பதோடு, ஆண்டுக்கு ஆண்டு விடியல் பயணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவது இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது.

மகளிர் மட்டுமல்ல, திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் நாம் செயல்படுத்திய இந்தத் திட்டம், அடுத்தடுத்து எல்லா மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது.

திராவிட மாடல் 2.0-வில் இந்தத் திட்டம் இன்னும் மேன்மையடையும். இது ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட் என்று கூறியுள்ளார்.

Summary

Dravidian Model Journeys - Chief Minister Stalin's Pride

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.