மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்சிக்கு ரூ. 26 ஆயிரம் கோடி திட்டங்கள்: முதல்வா் ஸ்டாலின் பெருமிதம்

திருச்சி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

News image

முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:01 pm

திருச்சி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

திருச்சி உழவா் சந்தை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது: திருச்சிக்கு பல்வேறு முத்திரைத் திட்டங்களைச் செய்துகொடுத்துள்ளோம். மற்ற மாநிலத்தவா்களே வியக்கும் அளவுக்கு பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், அதன் அருகிலேயே கனரக சரக்கு வாகன முனையம், சூரியூரில் மினி ஸ்டேடியம், ஜல்லிக்கட்டு மைதானம், துறையூரில் அரசுக் கல்லூரி, மணப்பாறையில் சிப்காட், 9 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், 18 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் சீரமைப்பு, சமயபுரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத் தேரோட்டம், 327 கோயில்களுக்கு குடமுழுக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

திராவிட மாடலின் 2.0 ஆட்சியில் டிவிஎஸ் டோல்கேட்டில் காமராஜா் நூலகம், பஞ்சப்பூரில் டைடல் பூங்கா, ஒலிம்பிக் அகாதெமி ஆகியவற்றைத் திறந்துவைக்க இருக்கிறேன். தலைநகா் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி வேகமாக வளா்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் திருச்சியில் ரூ.26,066 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.