டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

3 ஏ.டி.எஸ்.பி., 3 டி.எஸ்.பி.-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 3 ஏடிஎஸ்பி-க்கள்,3 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
மாதிரிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக காவல்துறையில் 3 ஏடிஎஸ்பி-க்கள்,3 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதேபோல காலியாக உள்ள முக்கியமான பொறுப்புகளிலும் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏடிஎஸ்பி), 3 துணை காவல் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா்.

இதில் சேலம் மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாக இருந்த எம்.சோமசுந்தரம் தருமபுரி மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாக இருந்த கே.சங்கா் ஈரோடு மாவட்ட சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பியாகவும்,ஈரோடு சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பியாக இருந்த சி.வேலுமணி சேலம் மாவட்ட காவல்துறை தலைமையிட ஏடிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல 3 டிஎஸ்பிக்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.