தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் 'எம்ஜிஆர் அதிமுக' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதியின் அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முதலில் திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 1967ல் திமுக எம்எல்ஏ ஆன நிலையில் 1971ல் மீண்டும் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் 1977ல் அதிமுகவில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அங்கிருந்து பாமகவுக்குச் சென்றார். பின்னர் மக்கள் நலவுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது தனது கட்சியை கலைத்துவிட்டு தேமுதிகவில் இணைந்தார்.
தொடர்ந்து மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவாளராகவும் பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்துள்ளார். தற்போது தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்து ஓபிஎஸ் முடிவெடுக்காததாலும் ஓபிஎஸ் அணியின் செயல்பாடுகளில் கருத்து வேறுபாடு உள்ளதாலும் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவரது 88 வயதில் 'எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்றும் ஒத்த கருத்துடையவர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.
வரும் 23 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கட்சியின் அறிமுக விழா நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அத்தியாயம் முடிந்தது எனவும் ஓபிஎஸ்ஸுடன் பழகியதற்காக வாழ்நாளை வீணாக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
summary
Panruti Ramachandran started a new party at age of 88
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அம்மா வேண்டாம், அக்கா என்றால் போதும்: தமிழிசை கலகலப்பு!

MK ஸ்டாலின் தலைமையேற்றால் ராகுல்காந்தி பிரதமராவார்! காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்

மாவோயிஸ்ட் மூத்த தலைவர் உத்தம் சிங் சுட்டுக்கொலை!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...



