டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கேப்டனின் ஆன்மா மன்னிக்காது! - பாஜக விமர்சனம்

திமுக - தேமுதிக கூட்டணி குறித்து பாஜக விமர்சனம்...

News image
விஜயகாந்த், பிரேமலதா- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 9:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

தனது வாழ்நாள் முழுவதும் திமுகவை எதிர்த்தவர் விஜயகாந்த் என்றும் திமுகவுடனான தேமுதிக கூட்டணியை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என்றும் தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தேமுதிகவை பொருத்தவரை, யாருடன் கூட்டணி என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று திமுகவுடன் கூட்டணி என்பதை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதி செய்துள்ளார்.

இதன்படி தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக - தேமுதிக கூட்டணி குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில்,

"தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" என்று பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.