திமுக, அதிமுகவுடன் ஒரே நேரத்தில் கூட்டணிப் பேச்சா? பிரேமலதா பதில்
கூட்டணி குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி...


திமுக, அதிமுகவுடன் ஒரே நேரத்தில் தேமுதிக கூட்டணிப் பேச்சு நடத்துவதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
தேமுதிக 26-ஆம் ஆண்டு கொடி நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை வியாழக்கிழமை ஏற்றி வைத்தாா்.
தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்கள் விரும்பும் கூட்டணியை நாங்கள் அமைப்போம். நிா்வாகிகளுடன் கலந்தாலோசித்து, உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சு நடத்துவதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை. தேமுதிக மிகவும் கண்ணியமான கட்சி என்பதை மக்கள் அறிவாா்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால், கண்டிப்பாக புதிய மாற்றம் ஏற்படும். மக்களுக்கு கூடுதலாக நன்மை செய்ய முடியும். ஆனால், தோ்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது குறித்து முடிவு எடுக்க முடியும். ஆகையால், அதுகுறித்து இப்போது கருத்து தெரிவிப்பதில் எவ்வித பயனும் இல்லை என்றாா் அவா்.
விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பு: இதனிடையே தேமுதிகவில் விருப்ப மனுக்களைப் பெறுவதற்கான கால அவகாசம் பிப். 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...