திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது! எதைச் சொல்கிறார் தங்கம் தென்னரசு?

தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது என்று மகளிர் உரிமைத் தொகை குறித்து தங்கம் தென்னரசு பேசினார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 10:12 am IST

சென்னை: மகளிர் உரிமைத் திட்டம் பற்றி தமிழக பட்ஜெட்டில் விவரிக்க நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஒட்டுமொத்த தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது என்று விவரித்துள்ளார்.

தமிழக இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் இன்று தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.

அவர் பேசுகையில், இல்லங்களின் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாடு முழுவதும் போற்றும் திட்டமாக உள்ளது. பிற மாநிலங்களும் பின்பற்றும் திட்டமாக உள்ளது.

இந்த திட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரே நாளில் ஏறத்தாழ ரூ.6500 கோடி நிதியை தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் கரங்களில் தவழச் செய்துள்ளோம். அதிகாலையிலேயே வங்கிகளில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்ட போது ஒட்டுமொத்த தமிழகமும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது.

கடந்த வெள்ளிக்கிழமை வைகறை வேளையில், கதிரவன் உதித்து தனது பயணத்தைத் தொடங்கிய அதே வேளையில் ஆரம்பித்து 3மணி நேரத்துக்குள் தமிழக்ததில் 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைத்த போது நாடே திரும்பிப் பார்த்தது. மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.

எதிர்காலத்தில் வரக்கூடிய தடைகளையும் நிகழ்நேரத்தில் கணித்து, அவற்றை தகர்த்து மக்களை காக்கும் உன்னத தலைவரை பெற்றுள்ளது தமிழகம். மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக கோடானு கோடி மகளிர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.