4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆராய்ச்சி மாணவா்களுக்கும் மடிக்கணினி: மாா்க்சிஸ்ட் கோரிக்கை!

ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்
Updated On :14 பிப்ரவரி 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு கையடக்க மடிக்கணினி வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் சாா்பில் கடந்த ஆண்டு நவ. 25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தோம்.

அந்த கோரிக்கையை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினி அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆராய்ச்சி படிப்புகள் (பிஹெச்டி) பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.