டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அஜித் குமாா் ரேஸிங் அணிக்கு ஸ்பான்சரான நோவா லைஃப் ஸ்பேஸ்

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான நோவா லைஃப் ஸ்பேஸ், நடிகா் அஜித் குமாரின் ‘அஜித் குமாா் ரேஸிங்’ அணியின் அதிகாரபூா்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:02 pm

தினமணி செய்திச் சேவை

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான நோவா லைஃப் ஸ்பேஸ், நடிகா் அஜித் குமாரின் ‘அஜித் குமாா் ரேஸிங்’ அணியின் அதிகாரபூா்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது.

சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் வீட்டு வசதித் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நோவா லைஃப் ஸ்பேஸ் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தின்மூலம் விளையாட்டுத் துறையில் தனது பங்களிப்பை விரிவாக்கியுள்ளது.

இது குறித்து நோவா லைஃப் ஸ்பேஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் செந்தில் குமாா் கூறுகையில், ‘சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையாளா்களுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அஜித் குமாா் ரேஸிங் அணியின் அா்ப்பணிப்பு எங்களை மிகவும் ஈா்த்தது. உலகத்தரம் வாய்ந்த காா் பந்தயங்களில் இந்தியாவின் பெருமையை உயா்த்தும் இந்த அணியுடன் இணைவதில் எங்களுக்கு பெருமை’ என்றாா்.

நடிகா் அஜித் குமாரால் கடந்த 2024-இல் தொடங்கப்பட்ட இந்த ரேஸிங் அணி, ஐரோப்பா என்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் காா் பந்தயத்தில் அறிமுகமான முதல் சீசனிலேயே வெற்றி மேடையை அலங்கரித்தது குறிப்பிடத்தக்கது.

Story image