டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருப்பரங்குன்றம் தர்காவில் பக்ரீத், ரமலானில் மட்டுமே தொழுகை : உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

News image
உச்சநீதிமன்றம் / திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தர்கா- கோப்புப் படங்கள்
Updated On :9 பிப்ரவரி 2026, 1:56 pm

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தர்காவில் அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (பிப். 9) தள்ளுபடி செய்தது.

மேலும், பக்ரீத், ரமலான் போன்ற சிறப்பு நாள்களில் மட்டும் தொழுகை நடத்த வரையறுக்கப்பட்ட உரிமைகள் உள்ளதாக உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

மேலும், விலங்குகளை பலியிட உத்தரவிட முடியாது என்ற உத்தரவையும் உறுதிப்படுத்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தர்காவில் பக்ரீத், ரலமான் பண்டிகைகள் மட்டுமின்றி அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் எம்.இமாம் உசேன் என்பவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரவிந்த் குமார் மற்றும் பி.பி வரலே அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண், ''நெல்லித்தோப்பு பகுதி இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அங்கு தொழுகை நடத்த அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. தொழுகை நடத்துவதால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதில்லை'' என வாதிட்டார்.

வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சமநிலையாக உள்ளதாகவும், இதில் தலையிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதன்மூலம், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகை நாள்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்திக்கொள்ளலாம். விலங்குகள் பலியிட அனுமதி இல்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

summary

SC upholds Madras HC’s deepam nod & restriction on Muslim prayers at Madurai hilltop

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.