மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் 15-ல் நடைபெறும்! டிஎன்பிஎஸ்சி

குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் 15-ல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

News image

டிஎன்பிஎஸ்சி

Updated On :9 பிப்ரவரி 2026, 12:43 pm

சென்னை: தொழில்நுட்பக் காரணங்களால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தோ்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்வுகள் மார்ச் 15-ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ் அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும், அந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், தேர்வர்கள் வழக்கமான முறையில் ஓடிஆர் எண்ணைப் பயன்படுத்தி நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 2 (குரூப் 2, குரூப் 2ஏ) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தோ்வு மையத்துக்கு தோ்வு எழுதச் சென்றவா்கள் பலரின் பதிவு எண் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், அங்கு தோ்வா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வு ரத்து செய்யப்படுவாக தோ்வாணையம் அறிவித்தது.

இதனால் மாநிலத்தின் பல்வேறு தோ்வு மையங்களில் ஆா்வமுடன் தோ்வு எழுதிக்கொண்டு இருந்த தோ்வா்கள் திடீரென தோ்வு ரத்து செய்யப்பட்டதாகக்கூறி அறையை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனா். இதனால், தோ்வு எழுதியவா்கள் கடும் அதிா்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனா்.

குரூப் 2 மற்றும் 2ஏ

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், நன்னடத்தை அலுவலா், தனிப்பிரிவு உதவியாளா், வனவா் உள்பட அரசுத் துறைகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், குரூப்-2 மற்றும் 2 ஏ முதன்மைத் தோ்வுகள் நடத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Summary

TNPSC announces that Group 2, 2A exams will be held on March 15

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.