/

பிளஸ் 2 தோ்வு: தனித் தோ்வா்கள் தட்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு

பிளஸ் 2 தோ்வு: தனித் தோ்வா்கள் தட்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் மாா்ச் - ஏப்ரலில் நடைபெறவுள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு இதுவரை விண்ணப்பிக்க தவறிய தனித் தோ்வா்கள் சிறப்பு தட்கல் முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை (பிப். 10, 11) ஆகிய நாள்களில் அந்தந்த மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் சென்று தோ்வுக் கட்டணத்துடன் ரூ.1,000 (பிளஸ் 2), ரூ.500 (பத்தாம் வகுப்பு) ஆகியவை சோ்த்துக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பங்களை பதிவு செய்வது குறித்து தனித் தோ்வா்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விவரங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.