டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சென்னையில் நோக்கியா ரூ. 270 கோடி முதலீடு!

சென்னையில் முதற்கட்டமாக நோக்கியா நிறுவனம் ரூ. 270 கோடி முதலீடு: வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா

News image
தமிழ்நாட்டில் நோக்கியா நிறுவனம் முதலீடு- X | TRB Rajaa
Updated On :7 பிப்ரவரி 2026, 12:40 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் முதற்கட்டமாக நோக்கியா நிறுவனம் ரூ. 270 கோடி முதலீடு செய்யவிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்த அறிவிக்கையில் டிஆர்பி ராஜா கூறியிருப்பதாவது, நிலையான நெட்வொர்க்குகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிக்காக தமிழ்நாட்டை நோக்கியா அணுகியுள்ளது. இதன் மூலம், தொலைத் தொடர்பில் மாநிலத்தின் தலைமை வலுப்படுகிறது.

சென்னையில் சிப்காட் சிறுசேரியில் நோக்கியா தனது புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 200 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

நோக்கியா, மாநிலத்தின் மிக முக்கியமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டாளர்களில் ஒருவர். இந்த நிறுவனம், ஏற்கெனவே 1997-ல் தமிழ்நாட்டில் 1,000 பொறியாளர்களை பணியமர்த்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இந்த விரிவாக்கம் தொடங்குகிறது.

திட்டத்தின் முதல் கட்டம் ரூ. 270 கோடி (முதலில் ரூ. 220 கோடி என்று வாக்குறுதியளிக்கப்பட்டது) முதலீட்டைக் கொண்டு வருகிறது. இரண்டாவது கட்டத்தில் சுமார் ரூ. 300 கோடி என்று கூறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.