சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், சென்னைக்கு வந்த விமானங்கள் திருச்சி, கோவைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று(பிப். 8) அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், விமானங்கள் தரையிறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்நிலையில், கோவை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் மீண்டும் அந்தந்த ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
கோலாலம்பூர், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சென்னையிலிருந்து பெரும்பாலான விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
மேலும், சென்னைக்கு வரும் புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது.
திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இருந்து சென்னைக்கு வரும் மின்சார ரயில்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகிறது.
summary
Due to dense fog in Chennai, flights arriving in Chennai have been diverted to Trichy and Coimbatore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

சென்னையில் கடும் பனிமூட்டம்: மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்!

ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவால் 50 விமானங்கள் ரத்து! சுற்றுலாப் பயணிகள் அவதி!
கடும் பனிமூட்டம்: தில்லியில் 128 விமானங்கள் ரத்து!
வீடியோக்கள்

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

#Shorts | ஜிம்பாப்வே ஜெயித்த கதை! | T20 World Cup | The Rise of Zimbabwe |
தினமணி வீடியோ செய்தி...

ஆன்லைனில் விற்கும் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்! எச்சரிக்கை!! |Online products | Health products
தினமணி வீடியோ செய்தி...

Nanjil Sampath Latest Interview | விஜய் இனி யாருடன் கூட்டணி? | TVK Vijay | DMK Alliance| MK Stalin
தினமணி வீடியோ செய்தி...


