டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாட்டிலேயே முரட்டு அடிமை யார் தெரியுமா? உதயநிதி கடும் விமர்சனம்

பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக, தற்போது இலையாக மாறிவிட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

News image
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 1:19 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக, தற்போது இலையாக மாறிவிட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல, தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தையும் தரவில்லை.

பட்ஜெட்டை அறிவித்து முடிப்பதற்கு முன்னரே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்கிறார். இந்தியாவிலேயே எடப்பாடி பழனிசாமிதான் முரட்டு அடிமை.

இவ்வளவு நாள்களாக, பாஜகவின் கிளையாக அதிமுக இருந்தது. ஆனால், தற்போது பாஜகவின் இலையாக மாறிவிட்டது.

இந்தியாவிலேயே 5 லட்சம் நிர்வாகிகள் மற்றும் மொத்தம் 50 லட்சம் தொண்டர்களைக் கொண்ட ஒரே கட்சி திமுகதான்.

நமது இளைஞர் அணி, மக்கள் பணியையும் கட்சிப் பணியையும் மேற்கொண்டு, மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது.

எவ்விதக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாமல் செயல்படுபவர்களும், எந்தக் கொள்கையும் இல்லாமல் கோஷமிடுபவர்களும் மக்களுக்கு எந்தப் பயனையும் தர மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.