டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுக வாக்குச் சாவடி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 12:26 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஜோலார்பேட்டை அருகே இன்று (பிப்.14) நடைபெற்று வரும் திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்கச் செல்லும்முன் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வடக்கு மண்டலம் அதாவது 8 வருவாய் மாவட்டங்கள், 47 தொகுதிகளுக்கான மண்டல மாநாடு இன்று ஜோலார்பேட்டை மண்டலவாடியில் நடைபெற்று வருகிறது.

47 தொகுதிகள் வாரியாக தொண்டர்கள் அமர இட வசதி பகுதிவாரியாக செய்யப்பட்டுள்ளன. பேருந்து, வேன் மற்றும் வாகனங்களை நிறுத்த தனி பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, 25 மருத்துவர்கள் தலைமையில் சிறப்பு மருத்துவ வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான ஏற்பாடுகள், விதிகளுக்கு உள்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் 47 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குச் சாவடிக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமையில் 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.