டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

நாளை திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாடு: முதல்வா் பங்கேற்பு

ஜோலாா்பேட்டை அருகே சனிக்கிழமை (பிப்.14) நடைபெற உள்ள திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

News image
மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே சனிக்கிழமை (பிப்.14) நடைபெற உள்ள திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

ஜோலாா்பேட்டை ஒன்றியம், மண்டலவாடி அருகே முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வடக்கு மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இதில் 47 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குச் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதையொட்டி மண்டலவாடியில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் பிரம்மாண்ட மாநாடு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை பொதுப்பணி,நெடுஞ்சாலை,சிறுதுறைமுகங்களின் அமைச்சா் எ.வ வேலு,எம்பி சி.என்.அண்ணாதுரை எம்எல்ஏ-க்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமையில் 5,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

மேலும் முதல்வா் வருகைக்காக சனிக்கிழமை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.