/

தமிழக தேர்தல்: பிப். 11-ல் துணைத் தேர்தல் ஆணையர் வருகிறார்!

பிப். 11-ல் துணைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வரவுள்ளது பற்றி...

News image
எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்- ENS
Updated On :5 பிப்ரவரி 2026, 7:42 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் சட்டபேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் வருகிற பிப். 11 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் கடந்த நவ. 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜன. 30 வரை நடைபெற்றது.

வருகிற பிப். 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. பிப்ரவரி இறுதியில் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் வருகிற பிப். 11 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார்.

எஸ்ஐஆர் இறுதிப் பணிகள், தேர்தல் முன்னேற்பாடுகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யவும் தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவும் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.