/

பட்ஜெட் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

பட்ஜெட் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

News image
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்- ஏஎன்ஐ(கோப்புப்படம்)
Updated On :1 பிப்ரவரி 2026, 8:38 am

இணையதளச் செய்திப் பிரிவு

பட்ஜெட் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் படி, நமது தலைநகர் சென்னையை ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுடன் இணைத்து, ரயில் பயணத்தை எளிதாக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடச் சேவையை அறிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். சுமார் 1.23 மணி நேரம் பட்ஜெட் உரை நிகழ்த்திய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

பட்ஜெட்டில், சென்னை - பெங்களுரு, சென்னை - ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று மக்களவையில் திமுக எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர். புதிய ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.