/

பட்ஜெட் 2026: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.

News image
பட்ஜெட் தாக்கல்.
Updated On :1 பிப்ரவரி 2026, 7:26 am

தினமணி செய்திச் சேவை

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், பொதிகை மலை உள்ளிட்ட இடங்களில் ட்ரெக்கிங் மேற்கொள்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். கலாசார செழுமையை விளக்கும் வகையில் கலாசார மையம் உருவாக்கப்படும்.

பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் தமிழகத்துக்கு வெளியாகின. இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.

அதிலும் குறிப்பாக, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என திமுக எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர். புதிய ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.