
உயர்கல்வித் துறையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: மாணிக்கம் தாகூர்
தமிழகத்தின் உயர்கல்வித்துறையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்திருப்பது குறித்து...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் - எக்ஸ்
சென்னை: இன்று உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையைத் தாக்கவ் செய்யும் அமைச்சர் விஸ்வநாதனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், பெருந்தலைவர் காமராஜர் கண்ட உயர்ந்த கல்விக்கனவை நனவாக்கி, தமிழகத்தின் உயர்கல்வித்துறையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பெருந்தலைவர் காமராஜர் கண்ட உயர்ந்த கல்விக்கனவை நனவாக்கி, தமிழகத்தின் உயர்கல்வித்துறையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பெரும்பாலான நிதி நிர்வாக மற்றும் தொடர் செலவினங்களுக்கே சென்றுவிடும் சூழல், தொலைதூரக் கல்வி வருவாய் இழப்பு, மத்திய யுஜிசி நிதி முடக்கம் மற்றும் பல்கலைக்கழக நிதி பற்றாக்குறை போன்ற கட்டமைப்பு சவால்களைச் சீரமைப்பது மிக முக்கியம். ஒரு பக்கம் ஊழலை ஒழித்து, மறுபுறம் வலதுசாரி,ஆர்எஸ்எஸ் சக்திகளின் ஊடுருவலை முறியடித்து, பல்கலைக்கழகங்களை மீட்டெடுத்து மாணவர்களுக்கு உலகத்தரக் கல்வியையும் பேராசிரியர்களுக்குப் பலத்தையும் தர வேண்டும்.
இன்று உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்யும் அமைச்சர் பி. விஸ்வநாதனுக்கு வாழ்த்துகள்!
வெற்றி தமிழகம் என்ற பாதையில் இந்த துறை சார்ந்த ஆக்கப்பூர்வப் பணிகளுக்கு முழு ஆதரவளித்து வழிநடத்தும் முதல்வர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
2,150+ உயர்கல்வி நிறுவனங்கள், 60+ பல்கலைக்கழகங்களின் மறுமலர்ச்சிக்கான வரலாற்று நிதிநிலை அறிக்கையாகவும், உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 50% ஜிஇஆர் என்ற மைல்கல்லைத் தாண்டி முன்னெடுத்துச் செல்லும் திட்டமாகவும் இது அமையும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்! என கூறியுள்ளார்.
Summary
Reviving the higher education sector is the need of the hour...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






