
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)
தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்திருப்பது பற்றி....

தங்கம் விலை. - படம்: பிடிஐ
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.1,120 அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,800க்கும் அதுவே கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,850க்கு விற்பனையாகிறது.
மேலும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,70,000க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் காலையில் ரூ.5.00 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.5.00 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிகழும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலையில் நேரடியான தாக்கங்கள் ஏற்படுகின்றன.
இதனால் தங்கத்தின் விலை உயருவதும் குறைவரும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Gold price surge of rs 2,000 per sovereign in a single day sparks shock among the public.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







