முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கை
முதல்வர் விஜய்யின் அழகிய முகத்தைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும் என தவெக எம்எல்ஏ கோரிக்கை...

தவெக எம்எல்ஏ | முதல்வர் விஜய் - TN assembly
முதல்வரின் அழகிய முகத்தைப் பார்க்க தனியாக ஒரு ஸ்க்ரீன் வேண்டும் என்று பேரவையில் தவெக எம்எல்ஏ கோரிக்கை முன்வைத்தார்.
மதுரை வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கல்லாணை இன்று பேரவையில் தன்னுடைய தொகுதி சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
இறுதியாக ஒரேயொரு தனிப்பட்ட கோரிக்கையை முன்வைப்பதாக பேரவைத் தலைவரிடம் தெரிவித்தார்.
"தலைவர் தளபதி எங்கு சென்றாலும் சிறுவயதில் ஓடோடிச் சென்று பார்த்து வளர்ந்த எங்களுக்கு இன்று அவரது அருகிலேயே அமரும் பாக்கியத்தை முதல்வர் கொடுத்திருக்கிறார்.
அதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் அவருடைய முகத்தை எங்களால் பார்க்க முடியவில்லை.
சாமி அமைச்சர் என்று அண்ணன் சொல்லும்போது முதல்வர் விஜய் குலுங்கிகுலுங்கி சிரித்ததை வீட்டிற்குச் சென்று டிவியில்தான் பார்த்தோம்.
எதிர்க்கட்சிகள் தன்னுடைய அரசைப் பற்றி குறை சொன்னால்கூட, அதில் காமெடி இருந்தால் சிரிக்கிற ஒரு தலைவன். அண்ணா வழி வந்த எங்கள் அண்ணாவின் அழகிய முகத்தைப் பார்ப்பதற்கு ஒரு ஸ்க்ரீன் ஏதாவது ஏற்பாடு செய்து தருமாறு என்னுடைய தனிப்பட்ட கோரிக்கையாக முன்வைக்கிறேன்" என்றார்.
Summary
A separate screen is needed to watch Chief Minister Vijay smile: TVK MLA request
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







