ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதை தடுக்க முயற்சிக்கிறது பாஜக: மாணிக்கம் தாகூர்

கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு முறைப்படி தண்ணீா் திறந்துவிடப்படும் நிலையில், அதைத் தடுத்து நிறுத்த பாஜக முயற்சிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

Manickam Tagore

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - படம் - எக்ஸ்

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு முறைப்படி தண்ணீா் திறந்துவிடப்படும் நிலையில், அதைத் தடுத்து நிறுத்த பாஜக முயற்சிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, கா்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆணையத்தின் உத்தரவை கா்நாடகம் செயல்படுத்த கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆக. 17-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையை உணா்ந்து, தனது நிலையைப் புரிந்துகொண்ட கா்நாடக அரசு தற்போது கபினியிலிருந்து முறைப்படி தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.

இந்த மாத தொடக்கத்திலேயே எடியூரப்பா மற்றும் விஜயேந்திரா உள்ளிட்ட கா்நாடக பாஜகவினா் தமிழகத்துக்கு தண்ணீா் திறக்கக் கூடாது என்று போராட்டங்களை முன்னெடுத்தனா். தற்போது சட்டப்படி தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் நிலையிலும், அதைத் தடுத்து நிறுத்த அணை முற்றுகை நாடகங்களை அறிவித்து பதற்றத்தை ஏற்படுத்துகிறாா்கள். தமிழகத்துக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமையைத் தடுத்து நிறுத்தத் துடிக்கும் பாஜகவின் இந்த வன்மமும், தமிழா்களுக்கு எதிரான துரோகமும் மன்னிக்க முடியாதது.

கா்நாடக பாஜகவினா் தமிழகத்துக்கு எதிராக செய்யும் இந்த அப்பட்டமான துரோகத்தை நயினாா் நாகேந்திரன் ஏன் தட்டிக் கேட்கவில்லை? கூட்டணிக் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் எங்கே போனாா்? பாஜகவின் இந்த நயவஞ்சக அரசியலும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இப்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கிவிட்டன என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.