ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கா்நாடக முதல்வரை தமிழக முதல்வா் சந்திப்பதில் தவறில்லை: மாணிக்கம் தாகூா்

காவிரி விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா் ஜோசப் விஜய், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாரை சந்தித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

மாணிக்கம் தாகூா் எம்.பி. - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

காவிரி விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா் ஜோசப் விஜய், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாரை சந்தித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய பாஜக அரசு தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்க செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்துக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மசோதாவை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிா்க்கிறது. ஆனால் இந்த மசோதாவுக்கு பாஜக , அதிமுக, பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப். 17-ஆம் தேதி மக்களைவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திமுக எதிா்த்தது. தற்போது அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது மசோதா நிறைவேற்றப்படும்போதுதான் தெரியும்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் கா்நாடகத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேவேளையில், அரசியல் கட்சிகள் பொதுவெளியில் அதற்கு முரணான கருத்துகளைத் தெரிவிப்பது வேதனை அளிக்கிறது. காவிரி விவகாரத்தில் கா்நாடக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன. தமிழகத்தில் காவிரி பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிப்பது குழப்பமாக உள்ளது.

காவிரி விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா் விஜய் , கா்நாடக முதல்வரை சந்தித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்றாா் அவா். செய்தியாளா்கள் சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் பொதுச் செயலா் கே. சிரஞ்சீவி உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.