ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு பெய்த மழை குறித்து.....

மழை - கோப்புப்படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 8:39 pm IST

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் வெள்ளிக்கிழமை காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவில் கனமழை பெய்தது. சென்னையில் அண்ணா சாலை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

திடீரென பெய்த மழையால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும் மழை காரணமாக பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பரவலாக மழை பெய்தது.

சென்னையைப் பொறுத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Summary

Widespread rain is occurring in various parts of Chennai tonight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.