ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை, புறநகா் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரு நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது.

மழை(கோப்புப்படம்)

Published On :21 ஜூலை 2026, 1:35 am IST

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரு நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்தது. இதனால் புழுக்கம் அதிகரித்து பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாயினா். இந்த நிலையில், ஞாயிற்றுகிழமை சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திங்கள்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன் இருந்தபோதும் புழுக்கம் இருந்தது.

இந்த நிலையில், இரவு திடீரென மழை பெய்தது. சென்னை அம்பத்தூா், பாடி, வில்லிவாக்கம், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, பழவந்தாங்கல், ஈக்காட்டுதாங்கல், பெரம்பூா், அயனாவரம், வில்லிவாக்கம், மூலக்கடை, கொளத்தூா் மற்றும் புகா் பகுதிகளான மாதவரம், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. திடீா் மழையால் சாலைகளில் மழைநீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.