ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்

பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டப்பேரவையில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச்சு...

We were under tension for five years; you are all relaxed: MRK Panneerselvam

எம்ஆர்கே பன்னீர்செல்வம் - TN

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:03 pm IST

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால் எந்த மாற்றமும் இல்லை என்று திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,

"விவசாயிகளுக்கு வாழ்வு வரும் என்று எதிர்பார்த்தோம். அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கூறினார். அதன்படி, வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என்று பார்த்தால் ஏமாற்றம்தான் இருக்கிறது.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது செய்தித்தாள், தொலைக்காட்சியை பார்த்துவிட்டு துறை அமைச்சரை தொடர்புகொண்டு பேசுவோம். காலையில் 4 மணிக்கு எல்லாம் போன் வரும்.

5 ஆண்டு காலம் நாங்கள் டென்ஷனாக இருந்தோம், நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள். அதுதான் எப்படி என்று தெரியவில்லை" என்றார்.

உடனே அமைச்சர் என். ஆனந்த், "ஒரு வாய்க்கால் பிரச்னைக்கு கூட போன் செய்து 'சரியாகிவிட்டதா?' என்று முதல்வர் கேட்பார். நாங்கள் தினந்தோறும் டென்ஷனில்தான் இருக்கிறோம். ஒவ்வொரு பிரச்னையிலும் பயத்தில் இருக்கிறோம்" என்றார்.

தொடர்ந்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "கூட்டங்களில் திமுகவை எதிர்த்து பேசுவது எளிது. நீங்கள் வந்த 3 மாத காலம்தான் ஆகியிருக்கிறது. இனிமேல்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டம் இன்றி 5 ஆண்டு காலம் இருந்தது.

கே.என். நேரு பெரிய விவசாயி, மாடு வளர்க்கிறார், வாழை தென்னை விவசாயம் செய்கிறார். எ.வ. வேலு டிராக்டர் ஓட்டுவார். செங்கோட்டையன் கூட தென்னை விவசாயி" என்றார்.

அமைச்சர் நிர்மல்குமார் எழுந்து, "திமுக ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்டது. விவசாயிகள் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது" என்று கூற,

"எந்த போராட்டம் என்று தெரியாமல் பேசுகிறார்கள். உங்க ஆட்சியில் மழை பெய்யவில்லை. எங்கள் ஆட்சியில் திடீர் திடீரென்று பெய்யும், விவசாயம் அதிகம் பாதிக்கப்படும். உடனே நானும் சக்கரபாணியும் அங்கு செல்ல வேண்டும்" என்றார்.

Summary

We were under tension for five years; you are all relaxed: MRK Panneerselvam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.