ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அழகான திரைக்கதை! திமுக முன்னாள் அமைச்சரை விமர்சித்த அமைச்சர் ரமேஷ்!

திமுக முன்னாள் அமைச்சரை அமைச்சர் ரமேஷ் விமர்சித்தது பற்றி...

MInister Ramesh

தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் - TN Assembly

Published On :10 ஆகஸ்ட் 2026, 11:21 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேச்சுக்கு பதிலளித்து தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேசினார்.

வேளாண் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை மீது திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இன்று பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்தார்.

அவர் பேசும்போது குறுக்கிட்ட அமைச்சர் ரமேஷ் பேசியதாவது:

”எவ்வளவு அழகான திரைக்கதையை தயாரிப்பார் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன். போகிற போக்கில் 5 ஆண்டுகள் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்ற வசனத்தையும் பேசினார்.

கடந்த ஆட்சியில் பல ஆண்டுகள் ரூ. 350 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்கு அமைப்போம் எனத் தெரிவித்தீர்கள். அதெல்லாம் என்ன ஆனது? கொள்முதலுக்கு பிறகான வாகனப் போக்குவரத்தில் முறைகேடுகள் நடைபெற்றது. அதெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லையா? கரும்பு கொள்முதல் விலைக்கு கீழ் அதிகாரிகள் ஒரு விலையை நிர்ணயித்த குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் கதையெல்லாம் சர்க்கரையை எறும்பு சாப்பிட்டது, சாக்கை கரையான் சாப்பிட்டது என்பது போல் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:

”கடந்த ஆட்சியில் நெல் சேமிப்பு கிடங்குகள் எங்கேயும் கட்டவில்லை என்று அமைச்சர் ரமேஷ் தவறான தகவலை வெளியிட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 18 மாவட்டங்களில் 54 இடங்களில் 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 383 கிடங்குகள் ரூ. 725 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது” என்றார்.

Summary

Minister Ramesh criticizes former DMK minister MRK Panneerselvam!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.