ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விவாகரத்து வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும்! நீதிபதியிடம் முதல்வர் விஜய் மனைவி சங்கீதா பிடிவாதம்!

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு பிற்பகலில் நடைபெறவுள்ளது பற்றி...

Vijay - Sangeetha

விஜய் - சங்கீதா - கோப்புப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 1:02 pm IST

விவாகரத்து வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு சங்கீதா மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனது கணவர் விஜய், பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதால், அவரிடமிருந்து விவாகரத்தும், நிரந்த ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கான உரிமையும் வேண்டும் என்று சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு செங்கல்பட்டு முதலாவது குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், இதுவரை மூன்று முறை வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. ஆனால், ஒருமுறைகூட விஜய்யும் சங்கீதாவும் நேரில் ஆஜராகவில்லை.

கடந்த ஜூன் 15 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் காணொலி வாயிலாக விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இன்று காலை காணொலி வாயிலாக விசாரணைக்கு சங்கீதா ஆஜரான நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதால் முதல்வர் விஜய்யால் ஆஜராக முடியவில்லை என்றும் வேறொரு நாளுக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கீதா தரப்பு, இன்றே விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சற்றுநேரம் வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், பின்னர், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தது.

Summary

The divorce case must be heard today itself! Chief Minister Vijay's wife Sangeetha insists to the judge!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.