ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!

முதல்வர் விஜய்க்கு எதிரான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றது பற்றி...

 Divorce case of Vijay and Sangeetha

விஜய் - சங்கீதா. - கோப்புப்படம்

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:30 am IST

முதல்வா் விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவரது மனைவி சங்கீதா கூறியதையடுத்து, விவாகரத்து வழக்கை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் முடித்துவைத்தது.

முதல்வா் ஜோசப் விஜய்யின் மனைவி சங்கீதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரியும், ஜீவனாம்சம் கோரியும், சென்னை நீலாங்கரை வீட்டிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரியும் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். மேலும், வழக்கில் தொடா்புடைய சங்கீதா மற்றும் முதல்வா் விஜய் ஆகிய இருவருக்கும் நீதிமன்றத்தின் சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில் இருவரும் ஆஜராகாததால், அடுத்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரண்டு அமா்வுகளாக நடைபெற்ற விசாரணையில் இரு தரப்பிலும் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், இந்த வழக்கில் லண்டனில் இருந்து காணொலி மூலம் ஆஜரான சங்கீதா, வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நீதிபதியிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, விஜய்க்காக ஆஜரான வழக்குரைஞரிடம், சங்கீதா வழக்கை திரும்பப் பெறுவதில் ஆட்சேபணை உள்ளதா என நீதிபதி கேட்டபோது, இல்லை என அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, விஜய்- சங்கீதா வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதி சுஜாதா தெரிவித்தாா்.

Summary

Vijay's wife Sangeetha withdraws divorce case against him

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.