ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழக மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கை கடற்படை! மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்...

tamilnadu cm vijay

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 8:44 pm IST

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இன்று (ஆக. 6) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் விசைப்படகையும் இலங்கை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 11 மீனவர்களை விடுவிப்பதற்கு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றி, முதல்வர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில்,

“இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (6.8.2026) எழுதியுள்ள கடிதம்.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது இன்று (6.8.2026) இலங்கைக் கடற்படையினர், மீனவர்களையும் அவர்களின் விசைப்படகையும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே தாம் இக்கடிதத்தை எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர்,

இச்சம்பவத்தில், இயந்திரக் கோளாறு காரணமாக அப்படகு நெடுந்தீவு கரையை ஒட்டித் தரைதட்டி நின்ற நிலையில், சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் தாண்டியதாகக் கூறி, அப்படகையும் அதில் இருந்த மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைதுசெய்து வருவது மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து, பாக் ஜலசந்தியை நம்பி வாழும் மீனவர்களின் மத்தியில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கெனவே சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்து, பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தாம் அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும், இப்பிரச்சனை குறித்து கூட்டு செயல்பாட்டுக் குழு மூலமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துவது மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நிகழாவண்ணம் தீர்வுகாண உதவும் என்பதையும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் தனிப்பட்ட தலையீட்டையும் விரைவான பதிலையும் எதிர்பார்ப்பதாகத் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதல்வர் தெரிவித்துள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.

Summary

TN CM Vijay has written a letter to the Central Government urging it to take steps to secure the release of Indian fishermen arrested by the Sri Lankan Navy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.