ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக....

8 Tamil Nadu fishermen arrested...

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது - கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 8:36 am IST

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறிய தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 8 மீனவர்கள் தனித்தனியே இரண்டு படகுகளில் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

இவர்கள் 8 பேரும் கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக வியாழக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

மேலும், அவர்களது விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்கள் 8 பேரையும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்குமாறு அவர்களின் குடும்பத்தினரும் மீனவ அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

Summary

Regarding the arrest of eight Tamil Nadu fishermen by the Sri Lankan Navy while they were fishing near Katchatheevu...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.