ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பட்ஜெட் 2026: மாற்றுத் திறனாளிகளுக்கு என்னென்ன அறிவிப்புகள்?

மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி தொடர்பாக..

tnassembly

அமைச்சர் மரிய வில்சன் - tnassembly

Published On :5 ஆகஸ்ட் 2026, 11:50 am IST

நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 30 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என்.மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில், மாற்றுத்திறனாளிகளை மகத்தான திறனாளிகளாக தவெக அரசு பார்க்கிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நமது சமத்துவக் கொள்கையின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

தற்போதுள்ள உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் இடம்பெறாத செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன உதவி உபகரணங்களான விளையாட்டு செயற்கை கால், மின்தசை சமிக்ஞை மூலம் செயல்படும் மேல்கை செயற்கை அவயம். பிற உயர்தர உதவி உபகரணங்கள் மற்றும் கோக்ளியர் இம்ப்ளான்ட் பேட்டரி போன்ற உயர்வகை உபகரணங்களை வாங்குவதற்காக, அதன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 30,000 வரை நிதியுதவி வழங்கப்படும்.

தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், அறிவுசார் குறைபாடு உடையோருக்கான அரசு நிறுவனங்கள் 'நம்பிக்கை இல்லம்' என்ற பெயரில் அமைக்கப்படும்.

இந்நிறுவனங்களில், மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி, ஆரம்பக்கால பயிற்சி சேவைகள், மறுவாழ்வு மற்றும் தொழிற்பயிற்சி வழங்கப்படும்.

தொடக்க நிலையில், ஒவ்வொரு நிறுவனமும் 50 மாணவர்கள் பயிலும் பகல் நேரப் பள்ளியாகச் செயல்பட்டு, பின்னர் தங்குமிட வசதியுடன் கூடிய நிறுவனமாக மேம்படுத்தப்படும். இதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.