ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலகத் தரத்தில்..! பட்ஜெட்டில் சென்னைக்கான அறிவிப்புகள் என்னென்ன?

தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பற்றி...

chennai

சென்னைக்கான அறிவிப்புகள் - TNDIPR

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:19 pm IST

தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னை நகருக்கான பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் என். மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில், சென்னையை உலக தரத்தில் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

  1. சென்னையின் கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் உலகத் தரத்தில் மறுசீரமைப்பு செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் என சென்னையின் புதிய அடையாளமாக கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் மாற்றப்படும்.

  2. நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

  3. நடைபாதைகள், தெருக்கள் மற்றும் நகர்ப்புறப் போக்குவரத்து மறுசீரமைப்பு பணிகள், 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்படும்.

  4. அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழிற்பேட்டை சாலைகள் மறுவடிவமைப்பு செய்யப்படும். பசுமை மற்றும் மக்கள் மைய பொது இடங்கள் உருவாக்கப்படும்.

  5. 5,904 சதுர கி.மீ. பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகர பகுதிக்கான ஓர் விரிவான முழுமைத் திட்டத்துக்காக ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  6. சென்னை மாநகரின் அனைத்து மின் நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்.

  7. சென்னைக்கு 1,000 புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். பேருந்துப் பணிமனைகளில் இவி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். இதற்காக ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  8. விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் ஆகிய 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசு விரைவான அனுமதி வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Summary

TN Budget 2026 - What are the budget announcements for Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.