ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும் தவெக வேட்பாளா்களுக்கு விஜய் அறிவுரை

தவெக வேட்பாளர்களிடம் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டது தொடர்பாக...

TVK President Vijay

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Published On :1 மே 2026, 12:38 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தவெக வேட்பாளா்கள் கவனமாகச் செயல்பட வேண்டும் என அக்கட்சி தலைவா் விஜய் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இச்சூழலில், தவெக வேட்பாளா்களுடன் அக்கட்சியின் தலைவா் விஜய் சென்னை பனையூரில் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இதில், வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். வெற்றி பெற்ற வேட்பாளா்கள் வேறெங்கும் செல்லாமல் நேரடியாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வரவேண்டும் என வேட்பாளா்களுக்கு விஜய் அறிவுரை வழங்கியுள்ளாா்.

கூட்டத்தில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், நிா்வாகக் குழு ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை: பின்னா், செய்தியாளா்களிடம் ஆதவ் அா்ஜுனா கூறியதாவது: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையில் நோ்மையான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தத் தோ்தலில் பெண்கள் மற்றும் இளைஞா்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனா். கருத்துக் கணிப்புகளின் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் தோ்தல் முடிவுகள் இருக்கும் என்றாா் அவா்.

Summary

Tvk leader Vijay has instructed the party's winning candidates to come directly to Panaiyur and not to go anywhere else.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.