ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் விஜய் தாயார் குறித்து நயினாா் நாகேந்திரன் பேச்சு: தவெக துணைப் பொதுச் செயலாளர் கண்டனம்

முதல்வர் விஜய் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதற்கு கண்டனம் குறித்து...

TVK Deputy General Secretary condemns

தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச் செயலாளர் ஜாகிர் உசேன் - எகஸ்

Published On :16 ஆகஸ்ட் 2026, 10:18 pm IST

முதல்வர் விஜய் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச் செயலாளர் ஜாகிர் உசேன், நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

நெல்லை கிழக்கு மாவட்ட தவெக செயலாளராக இருந்த ஜாகிர் உசேனை, அந்த கட்சியின் தலைவர் விஜய் கடந்த சில நாள்களுக்கு முன்பு தவெக துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நெல்லை வந்த அவருக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ரயில் நிலையத்தில் திரண்டதால், நெல்லை சந்திப்பு ரயில் நிலையமே விழாக்கோலம் பூண்டது. தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜாகிர் உசேன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு தொண்டனை தவெக துணைப் பொதுச்செயலாளராக நியமித்து, தவெக தலைவரும் முதல்வருமான விஜய் பெருமைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்டதை போல் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து ஊராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறும் வகையில் கட்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நயினாா் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம்

பெண்கள் குறித்து இழிவாக பேசிய தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனின் பேச்சுக்கு தவெக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்தவர், அவர் மீது சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளு எடுக்கப்படும். விரைவில் சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் கூறினார்.

பெண்களை தாய்க்கு மேலாக மதித்து பாதுகாப்பதுடன், அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழக முதல்வர் விஜய் இருந்து வருவதாகவும், பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Summary

TVK Deputy General Secretary condemns Nainar Nagendran's remarks regarding leader Vijay's mother

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.