மகாராஷ்டிர மாநிலம் சீரடி சாய் பாபா கோவிலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதன்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டது.
வருகின்ற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று (ஏப். 28) காலை திருச்செந்தூர் சென்ற விஜய், கடலில் நீராடிய பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் சீரடி சாய் பாபா கோவிலுக்குச் செல்வதற்காக விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, பலமுறை சீரடி சாய் பாபா கோவிலுக்குச் சென்று விஜய் தரிசனம் செய்துள்ளர். கடைசியாக தி கோட் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னதாகவும், தவெக முதல் மாநாட்டுக்கு முன்னதாகவும் விஜய் சீரடி சென்றது குறிப்பிடத்தக்கது.
Summary
TVK Leader Vijay Sets Off for Shirdi!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
சீரடியில் த.வெ.க. தலைவர் விஜய் வழிபாடு!

சீரடி சாய் பாபா கோவிலுக்குப் புறப்பட்ட விஜய்!

திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடி செல்லும் விஜய்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு



