மகாராஷ்டிர மாநிலம், சீரடி சாய் பாபா கோவிலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் சென்ற இரண்டு பெண்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டது.
வருகின்ற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், ஏப்ரல் 29, புதன்கிழமை சீரடி சாய் பாபா கோவிலிலும் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், நேற்று சீரடிக்கு தனி விமானம் மூலம் சென்ற விஜய்யுடன் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தயாரிப்பாளர் ஜெகதீஷ், விஜய் கார் ஓட்டுநர் ராஜேந்திரன், பாதுகாவலர் நயீம், தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி ஆகியோருடன் இரண்டு பெண்களும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
சாய் பாபா கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்தபோதும் இவர்கள் அனைவரும் அவருக்கு அருகில் இருந்தனர்.
இந்த நிலையில், விஜய்யுடன் சாய் பாபா கோவிலுக்குச் சென்ற இரண்டு பெண்கள் யார் என்ற விவாதம் இணையத்தில் தொடங்கியது.
அவர்கள் தொழிலதிபர் விஷ்ணு ரெட்டியின் மனைவி நேத்ரா ரெட்டி மற்றும் மகள் நேஹா ரெட்டி என்பது தெரியவந்துள்ளது.
தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி, விஜய்யின் மிக நெருங்கிய நண்பர் என்றும், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் அவருக்கு பக்கபலமாக இருப்பவர் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மே 2, சனிக்கிழமை வேளாங்கண்ணி பேராலயத்துக்கும், நாகூர் தர்காவுக்கும் விஜய் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
Who are the two women who visited the Shirdi temple with Vijay?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சீரடியில் த.வெ.க. தலைவர் விஜய் வழிபாடு!

சீரடி சாய் பாபா கோவிலுக்குப் புறப்பட்ட விஜய்!

சீரடி புறப்பட்டார் விஜய்!

திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடி செல்லும் விஜய்!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

