திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் இன்று சாமி தரிசனம் செய்த நிலையில், அடுத்த ஆன்மிகப் பயணமாக சீரடி சாய் பாபா கோவிலுக்குச் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டது.
வருகின்ற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்ற விஜய், கடலில் நீராடிய பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்செந்தூர் கோவிலில் தவெக சார்பில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான மே 3, மகாராஷ்டிர மாநிலம் சீரடி சாய் பாபா கோவிலுக்கு விஜய் செல்லத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சீரடி சாய் பாபா கோவிலுக்கு அடிக்கடி சென்று விஜய் தரிசனம் செய்துள்ளர். கடைசியாக தி கோட் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னதாகவும், தவெக முதல் மாநாட்டுக்கு முன்னதாகவும் விஜய் சீரடி சென்றது குறிப்பிடத்தக்கது.
Summary
TVK Leader Vijay Heads to Shirdi Following His Visit to Tiruchendur!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

சீரடி சாய் பாபா கோவிலுக்குப் புறப்பட்ட விஜய்!

சீரடி புறப்பட்டார் விஜய்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் த.வெ.க. தலைவர் விஜய் தரிசனம்!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை



