தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றால்... தேர்தல் செலவை ஏற்கக் கோரிய மனு தள்ளுபடி!

தேர்தல் செலவை ஏற்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி...

News image

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 6:43 am

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்று, ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்தால் தேர்தல் செலவுகளை ஏற்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்டுள்ளார்.

இந்த நிலையில், மதுரை மேலூரைச் சேர்ந்த மணி என்பவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெறுபவர், ராஜிநாமா செய்யும் தொகுதியின் தேர்தல் செலவீனங்களை ஏற்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட சட்டம் அனுமதிக்கிறது எனத் தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Summary

If a Candidate Contests and Wins in Two Constituencies... Petition Seeking Reimbursement of Election Expenses Dismissed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.