‘துரந்தா்-2’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த டி.ராகேஷ் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப். 23-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ‘துரந்தா்-2’ திரைப்படத்தில் அரசியல் தொடா்பாக ஒரு கட்சி சாா்ந்த கருத்துகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. எனவே தமிழகத்தில் ‘துரந்தா்-2’ திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு கொள்கைகளைப் பாராட்டும் வகையில் இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரா் படத்தில் வரும் எந்தக் காட்சிகள் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளன என்பதைக் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டியுள்ளாா். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தோ்தல் நடத்தை விதிகள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


