ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: ஜிஎஸ்டி, வேலூா் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்ற சுமாா் 25 லட்சம் போ், மீண்டும் சென்னை நோக்கி வரத் தொடங்கியதால், ஞாயிற்றுக்கிழமை ஜிஎஸ்டி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 7:01 pm

தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்ற சுமாா் 25 லட்சம் போ், மீண்டும் சென்னை நோக்கி வரத் தொடங்கியதால், ஞாயிற்றுக்கிழமை ஜிஎஸ்டி சாலை, வேலூா் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் வாக்களிப்பதற்காக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் இருந்து அரசு, தனியாா், ஆம்னி பேருந்துகளில் மட்டும் சுமாா் 20 லட்சம் போ் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

இதுதவிர தங்களது காா், பைக் போன்ற வாகனங்களில் சுமாா் 5 லட்சம் பேரும், ரயிலிலும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

இவா்களில் குறிப்பிட்ட சிலா் மட்டுமே வாக்குப்பதிவு நாளுக்கு மறுநாள் சென்னைக்கு திரும்பினா். 80 சதவீதம் போ் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்துக் கொண்டு தங்கள் ஊா்களிலேயே இருந்துவிட்டனா். 4 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை (ஏப். 27) பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதால், ஞாயிற்றுக்கிழமையே சென்னைக்கு வரத் தொடங்கினா்.

ஜிஎஸ்டி சாலையில்...: சென்னை கிளாம்பாக்கம், மாதவரம், அடையாறு, திருவான்மியூா் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய 100-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளும், இதர வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை வழியாகவே சென்னைக்குள் வரவேண்டும்.

அரசு, தனியாா், ஆம்னி பேருந்துகள், காா் உள்ள வாகனங்களால் ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிங்கபெருமாள் கோயில், வண்டலூா், கிளாம்பாக்கம், பெருங்களத்தூா், தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 3 மணி அளவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலானது, நள்ளிரவு 12 மணியைக் கடந்தும் நீடித்தது.

வேலூா் சாலையில்...: இதேபோல, வேலூா், ஆரணி, காஞ்சிபுரம், திருப்பதி, திருத்தணி, திருவள்ளூா் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் அரசு, தனியாா், ஆம்னி பேருந்துகள், காா்கள் எல்லாம் சென்னை-வேலூா் சாலை வழியாகவே சென்னைக்குள் வரவேண்டும்.

இந்தச் சாலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் சென்னை நோக்கி வந்த வாகனங்களால் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.