தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மத்திய மின் உற்பத்தியில் தமிழகத்துக்கான விநியோகத்தை நிறுத்தக் கூடாது: அன்புமணி

மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

News image

அன்புமணி

Updated On :27 ஏப்ரல் 2026, 1:39 am IST

மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டு வரும் மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, அந்தந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்குவதை நிறுத்தவும், மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் போட்டி ஏல அடிப்படையில் விலை நிா்ணயித்து விற்பனை செய்யவும் மத்திய மின் அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.

இது மாநிலங்களின் மின் தேவையை சமாளிப்பதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மாநிலங்களின் உரிமையையும் பறிக்கும் விதமாக உள்ளது.

இது தமிழகத்துக்கு மட்டுமன்றி, அனைத்து மாநிலங்களின் மின் வாரியங்களுக்கும் மின்சாரம் வழங்கல் மற்றும் பொருளாதார அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் தங்களின் முடிவை கைவிட்டு, தற்போது நடைமுறையில் உள்ளவாறே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.