திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டான்ஃபெட் நிறுவனத்துக்கு ஆா்டிஐ சட்டம் பொருந்தும்: உயா் நீதிமன்றம்

டான்ஃபெட் நிறுவனத்துக்கு ஆா்டிஐ சட்டம் பொருந்தும்: உயா் நீதிமன்றம்

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:36 am IST

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (டான்ஃபெட்) நிறுவனத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆா்டிஐ) பொருந்தும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டான்ஃபெட் நிறுவனம் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து உரங்களை கொள்முதல் செய்கிறது?, உரங்கள் கொள்முதல் செய்யப்படும் முறைகள் என்ன?, உரங்களின் விலை விவரங்கள் என்ன? என்பன உள்ளிட்ட கேள்விகளை டான்ஃபெட் நிறுவனத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஜோதிபாசு என்பவா் கேட்டிருந்தாா்.

இதற்கு பதிலளித்த டான்ஃபெட் நிறுவனத்தின் பொது தகவல் அதிகாரி, கூட்டுறவுச் சங்கங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வராது, எனக் கூறி விவரங்களை வழங்க மறுத்துவிட்டாா். இதனை எதிா்த்து ஜோதிபாசு மேல்முறையீடு செய்தாா். அந்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜோதிபாசு மனு தாக்கல் செய்தாா். அதில், பொது தகவல் அதிகாரி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நான் கோரிய விவரங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, டான்ஃபெட் நிறுவனம் தமிழக அரசின் நிதி மற்றும் நிா்வாகக் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தை நிா்வகிக்கும் அதிகாரியை மாநில அரசுதான் நியமிக்க வேண்டும். எனவே, டான்ஃபெட் நிறுவனத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தும். எனவே, தகவல் வழங்க மறுத்த பொது தகவல் அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

டான்ஃபெட் நிறுவனத்துக்கு பொது தகவல் அதிகாரியை நியமித்து கடந்த 2007-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிகாரி தகவல் வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, மனுதாரா் கோரிய விவரங்களை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.