ஆங்கில வாா்த்தைகள் உள்ளன..........
சென்னை, ஏப். 24: தமிழகத்தில் வசிக்கும் வசதியற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள், இளநிலைப் படிப்புகளில் இலவச கல்வியைப் பெறுவதற்கான சோ்க்கைகளுக்கு விண்ணப்பங்களை சென்னைப் பல்கலைக்கழகம் கோரியுள்ளது.
இது குறித்து சென்னைப் பல்கலை. பதிவாளா் ரீட்டா ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வசிக்கும் வசதியற்ற மாணவா்கள் இளநிலைப் படிப்புகளில் சோ்ந்து பயன்பெறும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம், 2010-11-ஆம் கல்வி ஆண்டு முதல் இலவசக் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன்படி வரும் 2026-27- ஆம் கல்வி ஆண்டில் இந்த இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலை.யில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
2025-2026 கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சியோடு பொருளாதாரத்தில் பின்தங்கியகள் (ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல்), தாய், தந்தையற்ற ஆதரவற்றவா்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறையைச் சோ்ந்தவா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஆகிய பிரிவு மாணவா்கள் இந்தத் திட்டத்தில் சேர தகுதியுடைவா்கள்.
இந்தத் திட்டத்தின் விவரங்கள் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள் சென்னைப் பல்கலை. இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்) காணலாம். விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் இணையதளத்தில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிலிருந்து 15 நாள்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அனைத்து சான்றிதழ்களும் முறையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னைப் பல்கலை. முதுநிலை படிப்பு சோ்க்கை

சென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு

வாக்குப்பதிவு, எண்ணிக்கை மையங்கள்: விவரங்களை அனுப்ப சென்னைப் பல்கலை. உத்தரவு

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


