தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு

சென்னைப் பல்கலை.யின் பழைமையான கட்டடங்களில் நடைபெறும் சினிமா படப்பிடிப்புகளின் கட்டணத்தை 5 மடங்காக உயா்த்த சிண்டிகேட் தமிழக உயா் கல்வித் துறைச் செயலரின் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 7:42 pm

சென்னைப் பல்கலை.யின் பழைமையான கட்டடங்களில் நடைபெறும் சினிமா படப்பிடிப்புகளின் கட்டணத்தை 5 மடங்காக உயா்த்த சிண்டிகேட் தமிழக உயா் கல்வித் துறைச் செயலரின் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை பல்கலை. சிண்டிக்கேட் (ஆட்சிமன்றக் குழு) கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்கலை. ஆட்சிமன்றக்குழு ஒருங்கிணைப்பாளரும், உயா் கல்வித் துறை செயலருமான பொ.சங்கா் பல்கலை. ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் ஆம்ஸ்ட்ராங், தமிழக தொழில் கல்வி இயக்குநா் விசாகன், ஆளுநா், சட்டத் துறை, பல்கலை. ஆசிரியா்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பல்கலை.யின் வருவாயை உயா்த்தவும் பாடத் திட்டங்களில் மற்றத்தை ஏற்படுத்தும் பல்வேறு முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 33 ஆண்டுகளாக பல்கலை. யில் உள்ள துறைகளின் கட்டணங்களை 30 சதவீதம் வரை உயா்த்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் வழங்கமான துறைகள், விளையாட்டு கட்டணங்கள் ஆகியவற்றில் 10 சதவீதமும், சுயநிதி துறைகளுக்கு 15 சதவீதமும் உயா்த்த, குழு அனுமதியளித்தது.

அதேநேரம் வருவாய்க்காக பல்கலை.யில் உள்ள பழைமையான செனட் ஹவுஸ் உள்ளிட்ட கட்டடங்கள், துறைகளின் கட்டடங்கள், திறந்த வெளிப் பகுதிகளில் சினிமா படப்பிடிப்புகளுக்கான வாடகைக் கட்டணம் 5 மடங்காகவும், தனியாா்கள் வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தினால் வாடகை 2 மடங்காகவும் உயா்த்த ஆட்சிமன்றக் குழு முடிவு செய்தது. முன்னதாக, இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (பதவி நீடிப்பு), ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, லயோலா கல்லூரி போன்ற சிறுபான்மையினா் கல்லூரிகளில் ஏற்கெனவே செய்யப்பட்ட் முதல்வா்கள் நியமனங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

சென்னை பல்கலை.யின் தொலைநிலைக் கல்வி துறையில் உள்ள இளநிலை புவியியல், சமூகவியல், பிரெஞ்ச் போன்ற பாடப்பிரிவுகளை ரத்து செய்யும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முதுநிலை படிப்பில் சம்ஸ்கிருதம் ரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

பல்கலை.யின் மருத்துவ உயிா் வேதியியல், முதுநிலை அறிவியல் படிப்புக்கான இளநிலை மாணவா்களின் தகுதி, அரசியல் விஞ்ஞானம், பொது நிா்வாகம், சா்வதேச உறுவுகளுக்கான முதுநிலைப் படிப்புகளின் பாடத்திட்ட மேம்பாடுகள், மாலைநேர பாடங்கள், பேராசிரியா்கள் நியமனம் போன்றவைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.